Thursday, January 8, 2015

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் திருவள்ளுவர் கட்டுரைப் போட்டி

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இணையம் மூலம் திருவள்ளுவர் கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என, மத்திய மனிதவள துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

அவர், டில்லியில், பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் எழுதிய, ’திருவள்ளுவர்’ புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் அவரது ஒப்பற்ற படைப்பான, திருக்குறள் குறித்து, அனைத்து மாணவர்களும் அறிய வேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு, இம்மாத மத்தியில், திருவள்ளுவர் பற்றி, இணையம் மூலம் கட்டுரைப் போட்டி நடத்த, சி.பி.எஸ்.இ., அமைப்பை, மத்திய அரசு கோரியுள்ளது.
நாடு முழுவதும், 22 மொழிகளில், இப்போட்டி நடத்தப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து, அனைத்து மாநிலங்களிடமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் அவற்றுக்கே உரிய கலாசார, பாரம்பரிய பெருமைகளுடன் சிறந்து விளங்குகின்றன; அதை நாம் கொண்டாட வேண்டும். அந்த வகையில், புதிய கல்விக் கொள்கை அறிமுகமாகும் போது, திருவள்ளுவரின் திருக்குறள், தேசிய பாடத் திட்டத்தில் இடம் பெறும் என, நம்புகிறேன்.

No comments:

Post a Comment