Saturday, May 3, 2014

முதல் 100 இடங்களுக்குள் வந்த இந்திய கல்வி நிறுவனம்

உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள், முதன்முதலாக ஐ.ஐ.டி., குவகாத்தி இடம் பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் இடம்பெறும் முதல் இந்தியக் கல்வி நிறுவனம் இதுதான் என்ற பெருமையை, ஐ.ஐ.டி., கவுகாத்தி பெறுகிறது.

Times Higher Education (THE) magazine வெளியிட்ட பட்டியலில், இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. போர்ச்சுகலின் நியூ யுனிவர்சிட்டி ஆப் லிஸ்பன் மற்றும் ஆஸ்திரேலியாவின் யுனிவர்சிட்டி ஆப் வெஸ்டர்ன் சிட்னி ஆகியவற்றுடன் இணைந்து, 87 வது இடத்தை, ஐ.ஐ.டி., கவுகாத்தி பகிர்ந்து கொண்டுள்ளது.
முதல் 100 இடங்கள் பட்டியலில் ஒரு இந்தியக் கல்வி நிறுவனம் இடம் பெற்றுள்ளதையடுத்து, உலகளாவிய கல்வி நிறுவனங்களின் தரநிலை வரிசையில், ஆசிய நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment