Saturday, May 3, 2014

பள்ளியை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா!

மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து, உள்ளே நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமையான இப்பள்ளி பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில், பல்வேறு கல்வி அலுவலகங்கள் உள்ளன. இப்பள்ளிக்கான சுற்றுச்சுவரை, சமூக விரோதிகள் உடைத்து கற்களை திருடி வருகின்றனர். இதனால் மெயின் ரோட்டிற்கு செல்லும் குறுக்கு வழியாக மக்கள் உபயோகப்படுத்துகின்றனர்.
மேலும், இப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, மது அருந்துவது, புகை பிடிப்பது, வகுப்பறை வராண்டாவில் பெண்களுடன் குடும்பம் நடத்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பின் விளையாட்டு மைதானத்தில், மது பாட்டில்களை உடைத்து நொறுக்குகின்றனர்.
அந்த கண்ணாடி துகள்கள், மாணவர்களை காயப்படுத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதுகுறித்து இரவு காவலாளி பாண்டி போலீசில் புகார் கொடுத்தார். இதனால் அவர் தாக்கப்பட்டார். உடனடியாக சுற்றுச்சுவரை எழுப்பி சமூகவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment