Wednesday, May 7, 2014

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

இந்த ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு பாடத் திட்டத்தின்படி, பள்ளித் தேர்வுகளை நாடெங்கிலும் ஒரே மாதிரியாக சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ல் துவங்கி ஏப்ரல் 17ல் முடிவடைந்தது.
10 கோடியே 29 லட்சத்து 874 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இது, கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 9.32 சதவீதம் அதிகம்.
இந்நிலையில், நேற்று டில்லியில் சி.பி.எஸ்.இ. நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. வரும் 16ல் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், சி.பி.எஸ்.இ.க்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடலாமா அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடலாமா என, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும், இம்மாதம் 26ல் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment