Friday, May 2, 2014

குற்ற சம்பவங்களை தடுக்க தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி

கிராமப்புறங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், கோவை மாவட்டத்தில் பல கிராமங்கள் மற்றும் ஒன்றியங்களில், குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில், பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, பள்ளி தலைமையாசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சமூக பாதுகாப்பு துறையின் வாயிலாக, கடந்தாண்டு அமைக்கப்பட்ட இந்த குழுக்களில், இதுவரை குறைந்தளவு குழுக்களின் உறுப்பினர்களுக்கே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற குழுக்களுக்கு, நடப்பாண்டில் பிரிவு வாரியாக பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டது.
மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி இன்று (2ம் தேதி), கிராமங்களில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், அரசு சார்பில் செயல்படும் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், "கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் முக்கிய உறுப்பினர்களாக கருதப்படும் கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மே 2ம் தேதி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, சமூக பாதுகாப்பு துறையின் திட்டங்களை ஆசிரியர்கள் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். ஆய்வின் முடிவில் விழிப்புணர்வு நிலையில் பின்தங்கிய கிராம பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment