Wednesday, May 14, 2014

அண்ணாமலை பல்கலையில் பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விற்பனை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு 31ம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விற்பனை செய்யப்படும் என, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக செய்திக் குறிப்பு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல், வேளாண் மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கு 2014 - 15ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் விற்பனை துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 2ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், தொலைதூர கல்வி இயக்குனர் அலுவலகம், முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி அலுவலகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைதூர கல்வி படிப்பு மையங்களில் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் 850 ரூபாய்க்கு, சென்னையில் மாற்றத்தக்க வகையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயரில் வங்கி வரைவோலை (டி.டி.,) எடுத்து பதிவாளர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அரசின் இட ஒதுக்கீடு விதிகள், பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையான படிப்பு மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு சேர்க்கை நடைபெறும். பொறியியல், வேளாண் படிப்புக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 04144 - 238348, 238349 ஆகிய உதவி மைய தொலைபேசி எண்களில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment