Friday, May 16, 2014

340 பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டுபிடிப்பு

அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) சார்பில் கடந்த மார்ச் மாதம் துவங்கி இம்மாதம் 10ம் தேதி வரை, திருப்பூர் வட்டார பகுதிகள் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பள்ளி செல்லாத குழந்தைகள் 298 பேர், மாற்றுத்திறனாளி குழந்தைகள் 42 பேர் என 340 பேர் இருப்பது தெரியவந்தது.

இக்குழந்தைகளுக்கு குறுகிய காலம், நீண்ட காலம் என்ற இரண்டு பிரிவுகளில் எஸ்.எஸ்.ஏ. மூலம் கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. சில மாதங்கள் மட்டுமே பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரையும், ஆண்டுக்கணக்கில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வரும் ஜூன் முதல் 2015ம் ஆண்டு மார்ச் வரையும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதன்பின் அவர்கள் ரெகுலர் வகுப்புகளில் சேர்க்கப்படுவர். பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளி சிறப்பு பயிற்சி மையம் அமைக்கப்படும். ஆதரவற்ற மற்றும் வசதியற்ற குழந்தைகள் உண்டு உறைவிட மையத்தில் சேர்க்கப்படுவர்.
அவர்களுக்கு உணவு இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளுடன் கல்வி கற்பிக்கப்படும். திருப்பூரில் சேரன் காலனி கோல்டன் நகர் மற்றும் காலேஜ் ரோடு கொங்கணகிரி ஆகிய பகுதிகளில் உண்டு உறைவிட மையங்கள் உள்ளன. இம்மையங்களில் ஆதரவற்ற குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

No comments:

Post a Comment