Friday, May 2, 2014

சி.பி.எஸ்.இ. புதிய பாடங்களை ஏற்றுக்கொள்ள பல்கலைகளுக்கு யு.ஜி.சி. கடிதம்

சி.பி.எஸ்.இ. அமைப்பு, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அமல்படுத்தியுள்ள 13 புதிய பாடங்களை, இளநிலைப் பட்டப் படிப்பில் ஏற்றுக்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து UGC தரப்பில் கூறப்படுவதாவது: CBSE அமைப்பு, தனது மேல்நிலைப் படிப்பில் பல புதிய பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பாடங்கள், பல பல்கலைகளால் ஏற்கனவே இளநிலை அளவில் வழங்கப்பட்டுவரும் பாடங்களுடன் ஒத்திசைவைக் கொண்டுள்ளன. கடந்த ஏப்ரல் 22ம் தேதி, UGC அமைப்பின் துணைச் செயலர் ஷகீல் அகமது, அனைத்து பல்கலைகளுக்கும் எழுதிய கடிதத்தில் இந்த விளக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு இளநிலைப் படிப்பில், ஒரு மாணவனை சேர்க்கும்போது, அவர், பள்ளி மேல்நிலையில் படித்து வந்த பாடம் குறித்து, கூடுதல் கவனம் மற்றும் அக்கறை செலுத்தி, சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனம், தான் வழங்கும் இளநிலைப் படிப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில், இது மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் என்றும் கூறப்படுகிறது.
" நடைமுறை தொழில்துறைக்குத் தேவையான திறன்களை ஒரு மாணவர் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று கருதியே, மேற்கண்ட புதிய படிப்புகளை CBSE அறிமுகப்படுத்தியது. சட்டம், மாஸ்மீடியா, தொழில்முனைதல், கிராபிக் டிசைன், கிரியேடிவ் ரைட்டிங் மற்றும் மொழிபெயர்ப்பு, தியேட்டர் படிப்புகள் மற்றும் பயோடெக்னாலஜி உள்ளிட்ட பல துறைகளில் மாணவர்கள் சிறப்பான திறனைப் பெறும் நோக்கில், பள்ளி மேல்நிலையில் அப்படிப்புகள் துவக்கப்பட்டன" என்று CBSE வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment