Sunday, May 4, 2014

உபரி ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்ய, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும்.
ஒவ்வொரு, மாவட்டங்களிலும் பாட வாரியாக காலி பணியிடங்களின் விபரம் சார்ந்த பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், உபரியாக உள்ள ஆசிரியர்களின் விபரங்கள், தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 2013 செப்., 1 நிலவரப்படி, பள்ளிகளில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உபரி ஆசிரியர்கள் கணக்கிடப்படுவர். இப்பட்டியலை, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நாளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் தலைமை அலுவலகத்தில், வரும் 7ம் தேதி ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களின் பொறுப்பில் உபரி ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

No comments:

Post a Comment