Wednesday, May 14, 2014

7 கல்வி நிறுவனங்களுக்கு இறுதி கெடு விதிப்பு

குமரி மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961 பிரிவு 37 பியின் படி விலக்களிப்பு கோரி குமரி மாவட்டத்தில் மொத்தம் 22 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன. இதில் ஆவணங்களின் அடிப்படையில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் முறையே அழைப்பாணைகள் அனுப்பப்பட்டது. இவைகளில் 15 கல்வி நிறுவனங்கள் விசாரணைக்கு ஆஜர் ஆகி சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்பித்து உள்ளனர்.
கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, முப்பந்தல், செண்பகராமன்புதூர் பகுதிகளுக்கு உள்பட 7 கல்வி நிறுவனங்கள் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை. மேற்படி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக வருகிற 19.05.2014 அன்று ஆஜராகி சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவே அவர்களுக்கு அளிக்கப்படும் இறதி வாய்ப்பு ஆகும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளாத கல்வி நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961 பிரிவு 37பி-யின்படி விலக்களிப்பு தொடர்பாக அரசுக்கு அனுப்பப்படும் அறிக்கையினை, நிராகரித்து அனுப்பநேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment