Saturday, May 3, 2014

தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக முதல்வருக்கு மாணவி எழுதிய உருக்கமான கடிதம்

சத்தீஸ்கரில் 10ம் வகுப்பு மாணவி தனக்கு பாஸ் மார்க் போடும்படி முதல்வர் ரமண் சிங்கிற்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் முதல்வர் ரமண் சிங் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதிய ஒரு மாணவி பெயிலாகி விட்டார். இந்தாண்டும் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், இந்த தேர்விலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கையில்லை. இதையடுத்து, முதல்வருக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: "அங்கிள், ஏற்கனவே ஒருமுறை தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். இது, எனக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டது. தற்போது எழுதிய தேர்விலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இனியும், அவமதிப்பை எதிர்கொள்ள முடியாது. எனவே, கருணை அடிப்படையில் பாஸ் மார்க் போடும்படி வேண்டுகிறேன்." இவ்வாறு, அந்த மாணவி எழுதியுள்ளார். முதல்வர் அலுவலகத்துக்கு வந்துள்ள இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சத்தீஸ்கர் மாநில கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், "ஏராளமான மாணவர்கள் கல்வித்துறைக்கும் இதுபோல் கடிதம் எழுதி உள்ளனர்" என்றனர்.

No comments:

Post a Comment