Friday, May 16, 2014

பிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவையில்லை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால், வேலை வாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்ய தேவையில்லை,&'&' என முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியதாவது: மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அலைவதை தடுப்பதற்காக, பள்ளிகளிலே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு விபரங்களை பதிவுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி ஐ.டி., பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாத பள்ளிகள், அருகில் உள்ள இன்டர்நெட் மையங்கள் மூலம் மாணவர்களின் பதிவுமூப்பை பதிவுசெய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் பதிவு செய்யலாம். ஆனால், பிளஸ்2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால் பதிவு செய்ய தேவையில்லை.
ஏற்கனவே பத்தாம் வகுப்பு பதிவு செய்திருந்தால், பிளஸ் 2 சான்றிதழ்களை மட்டும் பதிவு செய்தால் போதும். பதிவு செய்யாவிட்டால், பத்தாம் வகுப்பை சான்றிதழ்களையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளில் பதிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீனியாட்டிதான் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment