Wednesday, May 14, 2014

நலிவடைந்த மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க மறுக்கும் பள்ளிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்விக்கான விண்ணப்பங்களை தர தனியார் பள்ளிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே நேரடியாக பள்ளிகளுக்கு அளித்துவிடும். இந்த கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 95 தனியார் பள்ளிகளிலும் மே 3 முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட நலிவடைந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் தீர்ந்துவிட்டதாக கூறி, விண்ணப்பங்களை தர மறுக்கின்றன.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் இதுவரை 73 விண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டு உள்ளன. மே 19 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பள்ளிகள் விண்ணப்பங்களை தரவில்லை என்றால், மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் புகார் அளிக்கலாம்" என்றார்.

No comments:

Post a Comment