Friday, December 12, 2014

25 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 89,954 மாணவர்கள் சேர்ப்பு: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 89 ஆயிரத்து 954 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 2013-14ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் 49,864 மாணவ, மாணவி களும், நடப்பு கல்வி ஆண்டில் 89,954 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2013-14ம் ஆண்டில் சேர்க்கப் பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டணம் ரூ.25.13 கோடி கோரி அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நுழைவுநிலை வகுப்பில் (1-ம் வகுப்பு) ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப் பிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு மே 3 முதல் 9-ம் தேதி வரை என்பது மே 18-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, வாய்ப்பு கள் மறுக்கப்பட்ட மற்றும் நலி வடைந்த பிரிவினர் அனைவரும் பயன்பெற வசதியாக பள்ளி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்கள் வரை இச்சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதன் படி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment