Friday, December 5, 2014

மார்ச் 5ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு; 10ம் வகுப்பு தேர்வு தேதியும் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கி, மார்ச் 31ம் தேதி வரை நடக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரையும்; பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 25ம் தேதி துவங்கி, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்தது.

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை, 3.78 லட்சம் மாணவர்கள்; 4:43 லட்சம் மாணவியர் என, 8.21 லட்சம் பேரும்; 10ம் வகுப்பு தேர்வை, 5.18 லட்சம் மாணவர்கள்; 5.02 மாணவியர் என, 10.20 லட்சம் பேரும் எழுதினர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு
தேதி    -   பாடம்
மார்ச் 5   -   தமிழ் முதல் தாள்
மார்ச் 6   -   தமிழ் 2ம் தாள்
மார்ச் 9   -   ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10   -  ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 13   -  தொடர்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம்,                                கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிபாடம்

மார்ச் 16   -   வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18   -   கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச் சத்து                  மற்றும் சத்துணவு
மார்ச் 20   -   அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்,                               தொழிற்படிப்புகளுக்கான எழுத்து தேர்வு
மார்ச் 23   -   வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 27   -   இயற்பியல், பொருளியல்
மார்ச் 31   -   உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு
தேதி    -   பாடம்
மார்ச் 19   -   மொழிப்பாடம் 1
மார்ச் 24   -   மொழிப்பாடம் 2
மார்ச் 25   -   ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26   -   ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 30   -   கணிதம்
ஏப்ரல் 6   -   அறிவியல்
ஏப்ரல் 10   -   சமூக அறிவியல்

No comments:

Post a Comment