Monday, December 8, 2014

வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, கடந்தாண்டு அக்டோபரில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஒர் ஆண்டு ஆகியும், அதை இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை. இது தொடர்பாக, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்புக்கான தன்னார்வ அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் அதை இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை. இது, கோர்ட் உத்தரவை அவமதிக்கும் செயல் என, கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உதவும் வலை வாசல்
இணையம் மூலமாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து, மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு உதவும் கருவிகளை பெறுவதற்கு வசதியாக, மத்திய அரசு ஒரு வலை வாசலை (www.swavlamban.info) வடிவமைத்துள்ளது.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் கருவிகள், அதன் விலை, கிடைக்கும் நிறுவனம் போன்ற விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு இருக்கும். ஆட்டிசம், நினைவு தடுமாற்றம், கேட்கும் மற்றும் பார்வை திறன் இழந்தோர், தங்களுக்கு தேவையான கருவிகளை, இங்கிருந்து, இணைய வர்த்தகம் வாயிலாகவும் எளிதாக பெற முடியும்.

No comments:

Post a Comment