Wednesday, December 31, 2014

பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு ஜன.,6 மற்றும் 8 ல் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் அடிப்படை வசதிகள், மாணவர்களின் கல்வி தரம், பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொண்டு வருகிறது.
இதில் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி, மூத்த பட்டதாரி ஆசிரியர், மக்கள் பிரதிநிதி, மகளிர்குழு உறுப்பினர் என தலா ஒருவர் வீதம் 5 பேர் உள்ளனர். இதில் 3 உறுப்பினர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இக்குழுவின் பணிகள், பள்ளியின் வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்து ஜன,6 மற்றும் 8 ல் இரண்டு நாட்கள் ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்க அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment