Monday, December 8, 2014

கோவை மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 73 ஆயிரத்து 684 இலவச லேப்டாப் வினியோகம்

கோவை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, நான்கு ஆண்டுகளில், 73 ஆயிரத்து 684 இலவச லேப்டாப் வினியோகிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக வண்ண பென்சில், புத்தகப்பை, காலணி, கணித உபகரணப்பெட்டி, அட்லஸ் உட்பட, 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.
குறிப்பாக, மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நோக்கில் பிளஸ் 2 முடித்து செல்லும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளில், 73 ஆயிரத்து 684 மாணவர்களுக்கு. இலவச லேப்டாப் வினியோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-12ம் ஆண்டில், 119 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 259 மாணவர்கள்; 2012-13ல், 122 பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 596 பேர்; 2013-14ல், 18 ஆயிரத்து 596 பேர்; நடப்பு கல்வியாண்டில், இதுவரை, 129 பள்ளிகளை சேர்ந்த, 18 ஆயிரத்து 233 மாணவர்கள் என, மொத்தம், 73 ஆயிரத்து 684 மாணவர்களுக்கு லேப்டாப் வினியோகிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் லேப்டாப் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக பள்ளி தலைமையாசிரியர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment