Sunday, December 14, 2014

துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்கு வட்டார வளமையம் சார்பில், துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றலுடன் எளிய முறையில் உடல் அசைவுகளுடன் கூடிய சிறப்புப் பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முயல் போல் துள்ளுதல், கங்காரு போல குதித்தல், குதிரை போல ஓடுதல், பறவை போல பறந்து செல்வது போன்று மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் கற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment