Friday, December 12, 2014

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் கட்டாயம்

சி.பி.எஸ்.இ., பள்ளி வகுப்புகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தர தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ.,  பள்ளிகளில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. எனவே, 'வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., முதல் வகுப்பில் இருந்து தமிழ் பாடத்தை, முதல் பிரிவாக கற்றுக் கொடுக்க வேண்டும்' என, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவை வலியுறுத்தி கல்வி அதிகாரிகள், மாவட்டந்தோறும் சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பில், பகுதி ஒன்றில், தமிழ் என்ற அடிப்படையில் பாடங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த கல்வியாண்டில், இரண்டாம் வகுப்பிலும், தொடர்ந்து, 2025க்குள் பத்தாம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை, முழுமையாக கற்றுக் கொடுக்க, தமிழக கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment