Wednesday, December 17, 2014

3ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பாடபுத்தகங்கள் வழங்கி வருகிறது. 2014-15ம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி, நேற்று துவங்கியது.

மூன்றாம் பருவத்திற்கான, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், புலியகுளம் புனித அந்தோணியர் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று, 60 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் புத்தகங்களை பெற்றுச்சென்றனர்.
இன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், நாளை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட தொடர்ந்து 206 பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, மூன்றாம் பருவ துவக்க முதல் நாளில், மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வினியோகிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment