Tuesday, October 8, 2013

10ம் வகுப்பில் குறைவான தேர்ச்சி: 1000 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற ஆயிரம் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 113 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை (அக்.8) வழங்கப்படுகிறது.
இதுபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகக் குறைவான தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பகுதி வாரியாக இந்தப் பயிற்சி வழங்கப்படும்.
பள்ளியை எப்படி நிர்வகிப்பது, கற்பித்தலை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது, பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
இத்தகைய பயிற்சிகளின் மூலம் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர் கூறினார்.

No comments:

Post a Comment