Tuesday, October 29, 2013

திண்டுக்கல் மாவட்டத்தின் நூலகங்களில் உறுப்பினர்களாக 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு

மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நூலகத்தில் உறுப்பினர்களாக பதிவு பெற்றிருப்பது வளர்ச்சியையும், புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது.

நூலகம் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. வாடகை இல்லாத சிறிய அளவிலான கட்டடம் ரூ. 20 சந்தா தொகையில் குறைந்தபட்சம் 200 உறுப்பினர்களை இணைப்பது ரூ. ஆயிரம் நன்கொடையில் 2 புரவலர்களை சேர்ப்பது, ரூ.2,500 மதிப்பிலான தளவாட பொருட்களை வழங்குவது, 5 சென்ட் காலி இடம் இருக்கும் வகையில் நூலக கட்டடத்தை தேர்வு செய்வது போன்ற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் அந்த கிராமத்தில் நூலகம், அரசால் அமைத்துக் கொடுக்கப்படும்.
மாவட்டத்தில் ஒரு மைய நூலகம், 56 கிளை நூலகம், 90 ஊர்ப்புற நூலகம், 24 பகுதிநேரம் நூலகம் செயல்படுகிறது. அலுவலர்கள் எடுத்த முயற்சியினால் பல்வேறு பள்ளிகளில் பயிலும் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நூலகங்களில் உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment