Monday, October 28, 2013

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இந்தியன் வங்கியின் நாமக்கல் கிளை சார்பில் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டரில் அடிப்படை தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் எம்.எஸ். ஆஃபீஸ், பேசிக் கம்ப்யூட்டர் ஹார்டுவேர், விண்டோஸ் எக்ஸ்பி, ஃபோட்டோ ஷாப், பேஜ் மேக்கர், கோரல்டிரா, டிஜிட்டல் தொழில் நுட்பம், ஆப்செட் பிரிண்டிங், ஸ்கிரின் பிரிண்டிங், பிளக்ஸ் பேனர், திருமண பத்திரிக்கை உள்ளிட்டவை அமைப்பது தொடர்பான பயிற்சி வழங்கப்படும்.
குறைந்தபட்ச தகுதியாக பிளஸ் 2, கம்ப்யூட்டர் பேசிக் தெரிந்திருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் இயக்குனர், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ரவின் பிளாசா, திருச்சி மெயின் ரோடு, நாமக்கல்-637 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment