Monday, October 28, 2013

துணை தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றுகள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கான மார்க் சீட் வினியோகம் நேற்று துவங்கியது.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்களுக்கான மார்க்சீட் நேற்று முதல் துவங்கி வரும் 30ம் தேதி வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேல்நிலைத்தேர்வினை சிறப்பு அனுமதி (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மார்க்சீட் அவர்களது வீட்டு முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். தேர்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய நடைமுறைகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தனித்தேர்வர்களுக்கு மார்க்சீட் விநியோகிக்கப்படுகிறது.
மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., துணைத்தேர்வுகள் ஒரே நாளில் ஆரம்பித்து தனித்தேர்வர்களுக்கு மார்க்சீட் ஒரே நாளில் நேற்று வினியோகம் துவங்கியது.
"பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதியவர்கள் பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளியிலும் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து வேலை நாட்களிலும் தங்களது மார்க்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
விடைத்தாளின் நகல், மறுகூட்டல் ஆகியவற்றை விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்," என, சி.இ.ஓ., மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment