Monday, October 28, 2013

தனியார் பள்ளி அறைகள் அரசின் இலவசப் பொருட்களால் ஆக்கிரமிப்பு

மதுரை மாவட்டத்தில் அரசு இலவச நலத்திட்டப் பொருட்களைப் பாதுகாக்க பள்ளி அறைகள் ஆக்கிரமிப்படுவதை தடுக்க அரசு "குடோன்"களை ஏற்படுத்த வேண்டும், என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாவட்டத்தில் 1,018 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1.86 லட்சம் மாணவர்கள், 291 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2,12,027 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, அரசு சார்பில் புத்தகம், நோட்டு, பை, சீருடை, கலர் பென்சில், சைக்கிள், "லேப்டாப்" உட்பட 14 வகை இலவச பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது.
இலவச புத்தகங்கள், "லேப்டாப்"கள் தவிர நோட்டுகள், சீருடை, செருப்பு உள்ளிட்டவை நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது என்ற பெயரில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஏதாவது சில அரசு உதவி பெறும் பள்ளிகளின் வகுப்பறைகளில் இறக்கி பாதுகாக்கப்படுகின்றன.
இப்படி, இறக்கி வைக்கப்பட்ட இலவச பொருட்கள் 8 ஆண்டுகளாக மேலூர், ஆரப்பாளையம், கருமாத்தூர், செக்கானூரணி பகுதி பள்ளிகளின் வகுப்பறைகளை ஆக்கிரமித்துள்ளன. உயர் அதிகாரிகள் உத்தரவால் நிர்வாகிகளும் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்கள் மரநிழலில் படிக்க வேண்டியுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: "கற்பித்தல் பணிகளுக்கு இடையே 14 வகை அரசு நலத் திட்டப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்குவது சவாலாக உள்ளது. அரசு ஒதுக்கீடு செய்த பின் பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment