Friday, October 11, 2013

ரசாயன துறைக்கான நோபல்: 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

ரசாயனத் துறைக்கான, நோபல் பரிசை இம்முறை, மூன்று பேர் கூட்டாகப் பெறுகின்றனர். மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக, இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த வகையில் வேதியியல் துறையில், சாதனை புரிந்துள்ள, ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த, மார்டின் கார்ப்லஸ், 83, பிரிட்டனை சேர்ந்த, மைக்கேல் லெவிட், 66 மற்றும் இஸ்ரேலை சேர்ந்த, அரியே வார்ஷல், 72, ஆகியோருக்கு, கூட்டாக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இவர்கள் மூவரும், வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பினும், அமெரிக்காவில் குடியேறி அமெரிக்க குடியுரிமை பெற்று, கூட்டாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். வேதி வினைகளின் போது, மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான புதிய கண்டுபிடிப்பிற்காக, இவர்கள் மூவரும், நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் கண்டுபிடிப்பானது, மருந்து தயாரிப்புக்குரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களும், அது பற்றிய பாடப்பிரிவை பயிலும் மாணவர்களும் பயன் உள்ளதாக அமையும்.

No comments:

Post a Comment