Friday, October 11, 2013

நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும்

நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது? அவரது கண்டுபிடிப்பு என்ன? அதன் மூலம் அந்தத் துறையில் எத்தகைய வளர்ச்சி ஏற்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் காலை பிரார்த்தனை கூட்டங்களில் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதேபோல், இந்த விவரங்கள் அடங்கிய பத்திரிகை செய்திக் குறிப்புகளை மாணவர்களின் பார்வையில் படும்படி பள்ளி வளாகங்களில் ஒட்ட வேண்டும்.
இதன்மூலம், விஞ்ஞானிகளின் சாதனைகள் மாணவர்களை அறிவியல் பக்கம் ஈர்க்கும். அவர்களிடம் அறிவியல் சார்ந்த சிந்தனையும் வளரும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment