Monday, October 7, 2013

ரூ.15 ஆயிரம்: அரசினால் வழங்கப்பட்ட இலவச "லேப்டாப்" விலை

தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் இலவச "லேப்டாப்" வெளிமார்க்கெட்டில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தமிழக அரசு பிளஸ் 2 மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக "லேப்டாப்" வழங்கி வருகிறது. அதில், மாணவர்கள் பிளஸ் 2, கலை கல்லூரி, இன்ஜினியரிங் பாடங்களை "டவுன் லோடு" செய்து பதிவுசெய்து வைத்துள்ளனர். இதனால், மாணவர்கள் புத்தகங்கள் இல்லாமல் "லேப்டாப்" மூலம் எளிதாக படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இலவச "லேப்டாப்" பை, மாணவர்கள் பலர் கல்விக்காக பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை. இதில், சினிமா படங்கள், "கேம்ஸ்" ஐ டவுன் லோடு செய்து பார்த்து வருகின்றனர். குறிப்பாக, சில மாணவர்கள் புதிய "லேப்டாப்" ஐ வெளிமார்க்கெட்டில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கின்றனர். பழைய "லேப்டாப்" 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய்வரை விற்கப்படுகிறது.
மாணவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி, குறைந்த விலையில் இலவச "லேப்டாப்" பை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பதற்கு, ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அரசின் நோக்கம் நிறைவேறும். பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் நிலையில் தான் மாணவர்களுக்கு இலவச "லேப்டாப்" வழங்கப்படுகிறது. இதை கல்லூரியிலும் மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதே அரசின் நோக்கம்.
ஒரு சில இடங்களில் மாணவர்கள் "லேப்டாப்" பை விற்பனை செய்வதாக வாய்மொழி புகார் வருகிறது. மாணவர்களுக்கு வழங்கிய "லேப்டாப்" பை ஆசிரியர்கள் கண்காணிக்க அரசு உத்தரவு எதுவும் இல்லாததால் இது போன்ற நிகழ்வு தொடர்கிறது," என்றார்.

No comments:

Post a Comment