Wednesday, February 12, 2014

100வது நாளை வெற்றிகரமாக கடக்கிறது மங்கள்யான்

செவ்வாய்கிரகத்ததை ஆராய்வதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் இன்று தனது 100 நாள் பயணத்தை துவங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து மங்கள்யான் ஏவப்பட்டது. மங்கள்யானின் பயணம் குறித்து இஸ்ரோ கூறியிருப்பதாவது:

தற்போதைய நிலவரப்படி 16 மில்லியன் கி.மீ தூரத்திற்கு அப்பால் மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. விண்வெளி தகவல் பரிமாற்ற தொடர்பில் 55 வினாடிகள் தாமதமாக செல்வதாக கூறப்படுவதை தவிர்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அடுத்த 490 மில்லியன் கி.மீ., தூரத்தை அடுத்து வரும் 210 நாட்களில் எட்டிப்பிடிக்கும். வரும் செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடையும். கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி மங்கல்யானின் போக்கில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படின் வரும்ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதனுடைய போக்கில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment