Saturday, February 15, 2014

மாணவர்களை பாதிக்காதவாறு ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த யோசனை

பொதுத்தேர்வு துவங்க உள்ளதால் மாணவ, மாணவியர் பாதிக்காத வகையில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோபி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும், மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகள் நடக்கிறது. தேர்வை முன்னிட்டு மாணவ, மாணவியர் இரவில் படிக்க துவங்கி உள்ளனர்.
திருவிழா மற்றும் பொதுக்கூட்டங்களில் ஒலிப்பெருக்கிகள் சத்தம் எழுப்புவதால் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். மாணவ, மாணவியர் பாதிக்காத வகையில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டனர்.
கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கோவில் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment