Wednesday, February 19, 2014

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு ஏப்., 28ல் சிறப்பு டி.இ.டி., தேர்வு

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, ஏப்ரல், 28ம் தேதி, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்” என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது.

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடம், அதிகளவில், நிரப்பப்படாமல் உள்ளன. இதை கருத்தில் கொண்டு பார்வையற்ற பட்டதாரிகளுக்கு என, தனியாக, சிறப்பு தகுதி தேர்வு நடத்த டிசம்பரில், தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, "சிறப்பு டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் 28ல் நடத்தப்படும்" என டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. "மார்ச் 5 முதல் 25 வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் விற்பனை செய்யப்படும். 50 ரூபாய் கொடுத்து, விண்ணப்பத்துடன், தேர்வு குறித்த விளக்க புத்தகத்தையும் பெறலாம்" என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இதற்கிடையே, பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, டி.இ.டி., தேர்வு தொடர்பாக, 40 நாள் இலவச பயிற்சி அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் நாளை வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் தங்களது பெயரை பதிவு செய்யலாம்.
வரும் 22ம் தேதியிலிருந்து 40 நாள், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை, 200க்கும் மேற்பட்டோர், பதிவு செய்திருப்பதாக இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment