Sunday, February 23, 2014

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கேன்வாஸ் ஷ¤ மட்டுமே பயன்படுத்த ஆணை

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கான சீருடையின் ஒரு பகுதியாக கேன்வாஸ் ஷ¤க்களையே பயன்படுத்த வேண்டுமென சி.பி.எஸ்.இ., அமைப்பு, தனது இணைப்பு பள்ளிகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்ரகாண்ட் மாநிலத்தின் People for Animals என்ற அமைப்பை சேர்ந்த கவுரி மவுலேக்கி, இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ., தலைவருக்கு எழுதிய கடிதத்தின்படி, சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், லெதர் ஷ¤க்கள் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் கெடுதல் செய்பவையாக உள்ளன. ஏனெனில், லெதர் உற்பத்தி செய்யும்போது பெரிய நச்சுத்தன்மையுள்ள ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, லெதரையே பயன்படுத்தாமல் இருப்பதன் மூலமாக அந்த அபாயத்தை தடுக்க முடியும். சுற்றுச்சூழலையும், விலங்குகளையும் பாதுகாக்க முடியும்.
பள்ளி மாணவர்கள் லெதர் ஷ¤க்கள் அணியும் வழக்கத்தை மாற்றுவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு பெருமளவில் துணைபுரிய முடியும். மேலும், லெதர் ஷ¤வுடன் ஒப்பிடுகையில் கேன்வாஸ் ஷ¤க்கள், மாட்டுவதற்கும், கழற்றுவதற்கும் எளிதானவை மற்றும் சொகுசானவை மட்டுமின்றி, விலையும் குறைவு. மேற்கண்ட பல்வேறு காரணங்களால் இந்தப் புதிய முடிவை சி.பி.எஸ்.இ., எடுத்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment