Wednesday, February 19, 2014

குரூப்-2 வினாத்தாள் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

குரூப்-2 வினாத்தாள் வெளியான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் வழங்கப்படாதால், ஏப்ரல், 1ம் தேதிக்கு  விசாரணையை நீதிபதி கவிதா தள்ளிவைத்தார்.

தமிழகத்தில் 2012ம் ஆகஸ்ட்டில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஈரோடு, தர்மபுரியில் தேர்வுக்கு முன்னமே, வினாத்தாள் வெளியாகி, தேர்வு ரத்தானது. டவுன் போலீஸ் வழக்கு பதிவு செய்து தனக்கொடி, செந்தில், ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராவ், ஒடிஸாவை சேர்ந்த ஹகன், அச்சக ஊழியர் கோத்ரா மோகன்நந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
சி.பி.சி.ஐ.டி.,போலீஸாருக்கு வழக்கு  மாற்றப்பட்டதும், வணிக வரித்துறை இணை கமிஷனர் ரவிக்குமார், அச்சக உரிமையாளர் ரிஷிகேஷ் குண்டு உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர். நான்கு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
முதல் குற்றவாளியான ரிஷிகேஷ் குண்டு முதல் அனைவரும் ஜாமினில் வெளியே உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் 600 பக்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில், முதல் விசாரணை நேற்று துவங்கியது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான ரிஷிகேஷ் குண்டு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். மற்ற 25 பேருக்கும் சம்மன் வழங்கப்படாததால் நேற்று ஆஜராகவில்லை.
இதை அடுத்து, ஈரோடு ஜே.எம்., 3 நீதிபதி கவிதா வழக்கை ஏப்ரல், 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment