Tuesday, February 4, 2014

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.

அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, குழந்தைகள் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்போது ஜனவரி 29ம் தேதி முதல், பிப்ரவரி 5ம் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
தற்போது, திருப்போரூர், காட்டாங்கொளத்துார் ஒன்றியங்களில், இறுதிக்கட்ட பணி தீவிரமாய் நடந்து வருகிறது.அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், வீடுவீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இந்த பணியில், அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment