Wednesday, February 19, 2014

மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் ஒர்க்ஷாப்!

மேல்நிலைக் கல்வியை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் (குறிப்பாக பிளஸ் 1) பயன்பெறும் வகையிலான ஒரு ஒர்க்ஷாப்பை, ஐ.ஐ.டி., சென்னை நடத்துகிறது.

Science and Engineering — A Journey எனும் பெயரிலான அந்த ஒர்க்ஷாப், தமிழ்நாட்டின் அறிவியல் கிளப்புகள் பெடரேஷன் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படுகிறது.
ஐ.ஐ.டி., சென்னை வளாகத்தில் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் மேற்கண்ட நிகழ்வு நடைபெறுகிறது. இதன்மூலம், அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த அறிமுகம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இதன்மூலம், தங்களுக்கான எதிர்கால தொழில்துறையை மாணவர்கள் தேர்ந்தெடுக்க உதவி செய்யப்படும். இந்நிகழ்ச்சிக்கு, சென்னை முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்கள், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கலந்துகொள்வதற்கு பதிவுசெய்யப்படுவார்கள்.
கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., சென்னையின் பல்வேறான ஆய்வகங்கள் மற்றும் பல ஆராய்ச்சி வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிடும் வாய்ப்புகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment