Saturday, February 15, 2014

பாலியல் தொல்லை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்கும் நோக்கில் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுக்க உள்ள ஆசிரியர்கள், மாணவியருக்கு பயிற்சி, விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நீலகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சார்பில் மாவட்டத்தில் உள்ள வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு முதற் கட்டமாக நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி வட்டார ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வசந்தா துவக்கி வைத்தார். ஆசிரியப் பயிற்றுனர்கள் எழிலரசன், அம்சவேணி பயிற்சி வழங்கினர். வகுப்பறைகளில் மாணவியர்க்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், ஆசிரியர்களின் அணுமுறையை அறிதல், புகார் அளித்தல் உட்பட விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், "பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பள்ளி குழந்தைகள் அவர்களது பெற்றோர் 24 மணி நேரத்திற்குள் ஆசிரியர் அல்லது தலைமையாசிரியருக்கு புகார் வழங்க வேண்டும். மனு பெற்ற அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்கள் அந்த புகார் மனு குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி, கல்வி துறை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மனுவை, துறை சார்ந்த இணை இயக்குனர் 30 நாளுக்குள் விசாரித்து தீர்வு காண வேண்டும்" என்பன உட்பட விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, பயிற்சி பெற்ற ஆசிரியப் பயிற்றுனர்கள் வரும் 22ம் தேதி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவர்.

No comments:

Post a Comment