Thursday, February 13, 2014

பள்ளி பாட புத்தகங்களை ஏலத்தில் விட ஆந்திரா முடிவு

ஆந்திர மாநிலம் ஐதராபாத் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் வரும் 19ம் தேதி பள்ளி பாட புத்தகங்களை ஏலத்தில் விட முடிவுசெய்துள்ளதாக அதன் செய்தி குறி்ப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவை தெரிவித்திருப்பதாவது: ஏலம் விட உள்ள புத்தகங்கள் அனைத்தும் ஒன்று முதல் ஒன்பதாம்வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள். இவை அனைத்தும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்டவை.
புத்தகங்கள் அனைத்தும் 40 மெட்ரிக் டன் அளவு கொண்டவை. தற்போது அவை அனைத்தும் பயன்படு்த்த முடியாத நிலையில் உள்ளதால் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கல்வி அதிகாரி சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

No comments:

Post a Comment