Tuesday, October 1, 2013

குரூப்-1 தேர்வு எழுதும் வயது வரம்பை உயர்த்தவேண்டும் அரசுக்கு பட்டதாரிகள் கோரிக்கை


குரூப்-1 தேர்வு எழுதுவதற்கான பட்டதாரிகளின் வயது வரம்பை உயர்த்தவேண்டும் என்றும், வருடந்தோறும் நடத்தவேண்டும் என்றும் அரசுக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் எஸ்.பொன்னம்பலம், காட்டுமன்னார்கோவில் தேன்மொழி, தர்மபுரி கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பட்டதாரிகள் தமிழக முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-குரூப்-1 தேர்வுதமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களாகிய நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கும், வறுமைக்கும் இடையே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கு தயார் செய்து வருகிறோம்.இந்த தேர்வை வருடம் தோறும் நடத்துவதில்லை. அவ்வாறு நடத்தினாலும் முடிவு வெளியிட்டு பணியில் சேர 3 வருடம் ஆகிறது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் இதுவரை 12 வருடங்களில் 5 முறை மட்டுமே குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதுகிறார்கள். அதில் தேர்ச்சி பெறாமல் அவர்கள் பிறகு குரூப்-1 தேர்வை எழுத வரும்போது அவர்களுக்கு வயது வரம்பு அதிகரித்து விடுகிறது. இதனால் அவர்கள் குரூப்-1 தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்படுகிறது.வயது வரம்பை உயர்த்தவேண்டும்குரூப்-1 தேர்வை எழுத தமிழ்நாட்டில் அதிகபட்ச வயது 35 ஆகும். ஆனால் குஜராத், கேரளா, அரியானா, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் உள்பட அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு 45 ஆக உள்ளது. அதுபோல எவ்வளவோ பேர் வாழ்க்கையில் ஒளிஏற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வயது வரம்பை 35 என்பதை 45 ஆக உயர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment