Wednesday, March 19, 2014

ஏப்ரல் 1ம் தேதி முதல் அனுமதி அட்டைகள்!

சி.பி.எஸ்.இ., நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான(AIPMT - 2014) அனுமதி அட்டையை(Admit card), வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், விண்ணப்பித்தவர்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://aipmt.nic.in/aipmt/ என்ற வலைதளம் சென்று அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். தங்களின் விண்ணப்பக் கட்டணத்தை சரியான தேதியில் செலுத்திய தகுதியுள்ள மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளை CBSE மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதேசமயம், குறிப்பிட்ட தேதியைத் தாண்டி, கட்டணம் செலுத்தியவர்கள், ஏப்ரல் 10ம் தேதி முதல் அனுமதி அட்டையைப் பெறலாம். 15% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்காக, நாடு முழுவதும், மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, AIPMT - 2014 தேர்வு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment