Monday, March 24, 2014

ரோபோ எழுதிய செய்தி பத்திரிகையில் வெளியீடு

இயந்திர மனிதன் (ரோபோ) எழுதிய செய்தி, அமெரிக்காவின் "தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்"பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளரும், புரோகிராமருமான, கென் ஷ்வெங்கே இந்த ரோபோவை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ, பூகம்பம் குறித்த செய்திகளை எழுதுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், தானியங்கி முறையில் செய்தியை தயாரித்து விடும். "தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்" பத்திரிகை மற்றும் அமெரிக்காவின் ஜியோலாஜிக்கல் சர்வே போன்ற நம்பகமான இடங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் செய்தியைத் தயாரித்து, அச்சிட்டு அனுப்பியது.
பூகம்பம் மட்டுமல்லாமல், நகரில் நடக்கும் குற்றங்கள் குறித்த செய்திகளையும் உடனுக்குடன், துல்லியமாக தயாரித்து அளிப்பதால், மக்கள் உண்மையான நிலவரத்தை அறிய முடியும். ரோபோ பத்திரிகையாளரின் சிறப்பம்சங்கள் குறித்து, ஷ்வெங்கே கூறியதாவது:
இந்த ரோபோ யாருடைய வேலையையும் பறிக்கவில்லை; மாறாக, அவர்களுடைய வேலையை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் உதவி செய்யும். செய்தியாளர்களுக்கு மாற்றாக, இந்த ரோபோவை தயாரிக்கவில்லை; தேவையான தகவல்களை விரைந்து ஒருங்கிணைப்பதற்கும், அதை பத்திரிகைகளில் வெளியிடும் வகையில் செய்தியாளர்களுக்கு உதவவும் தயாரிக்கப்பட்டது. இவ்வாறு ஷ்வெங்கே கூறியுள்ளார்.

No comments:

Post a Comment