Friday, March 21, 2014

தேர்வு மையம் கேட்டு மாணவர்கள் மறியல்

கல்லல் முருகப்பா பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையம் செயல்பட்டு வந்தது. இங்கு முருகப்பா பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, சாந்திராணி பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதி வந்தனர். இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளும் இங்குள்ள பிரிட்டோ பள்ளியில் தான் தேர்வு எழுத வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

பிரிட்டோ பள்ளியில் தேர்வு எழுத மாட்டோம் என அனைத்து பள்ளிகளும் போராட்டத்தில் குதித்தன. கடந்த மாதம் 27 ந்தேதி முருகப்பா பள்ளி மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். அப்பொழுது மாவட்ட வருவாய் அலுவலரும்,மாவட்ட கல்வி அதிகாரியும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முருகப்பா பள்ளியிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என கூறினர்.
நேற்று வரை அனுமதி கடிதம் கிடைக்காததால் நேற்று காலை 11 மணிக்கு சமூக ஆர்வலர் ஆறுமுகம் தலைமையில் சாந்திராணி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போதே முருகப்பா பள்ளியில் தேர்வு மையம் அமைக்க அனுமதி கடிதம் கிடைத்தது. இதனால் மாணவர்களும்,பெற்றோரும் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment