Wednesday, March 12, 2014

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்"

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நேற்று முதல், "ஹால் டிக்கெட்" பதிவிறக்கம் செய்ய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது.
தேர்வு எழுதுவதற்காக, "ஆன்-லைனில்" விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்" பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.tndge.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் பிரின்ட் அவுட் பகுதியில் சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், "ஹால் டிக்கெட்" திரையில் தோன்றும்; அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேற்று மாலை முதல் பதிவிறக்கம் செய்ய, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அறிவியல் பாடத் தேர்வர்களுக்கு மார்ச் 18 முதல் 22க்குள் செய்முறை தேர்வு நடக்கும். செய்முறை தேர்வு குறித்து, மார்ச் 17 பிற்பகலில் தலைமை ஆசிரியரிடம் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment