Sunday, March 23, 2014

தென்னாப்ரிக்க பள்ளிகளில் இந்திய மொழிப் பாடங்கள்

தென் ஆப்ரிக்க பள்ளிகளில் இந்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட, இந்திய மொழிகளைக் கற்பிக்க அந்நாட்டு கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் 14 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்தியர்களின் குழந்தைகள், அந்நாட்டு பள்ளிகளில் படிக்கும் நிலையில் இந்திய மொழிகள் இல்லாததால், மிகவும் சிரமப்படுகின்றனர். இந்திய வம்சாவளியினரின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு கல்வித்துறை, இந்தியர்கள் அதிகம் வசிக்கும், "க்வாஜூல் - நடல்" பகுதியில் உள்ள பள்ளிகளில் இந்திய மொழிகளைக் கற்பிக்க அனுமதி வழங்கி உள்ளது.
இங்கு படிக்கும் மாணவர்கள் தங்களுடைய 3வது விருப்ப மொழியாக இந்திய மொழிகளை படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment