Sunday, March 23, 2014

அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளிமாவட்டங்களை சேர்ந்த தனியார் கம்பெனி மூலம் கருவிகள் வழங்கப்பட்டன. இதற்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தலைமை ஆசிரியர்களே உபகரணங்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கல்வியாண்டில் தனியார் கம்பெனி மூலம், அறிவியல் கருவிகள் அரசு உயர்நிலை பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறும் பணி துவங்கியுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தனியார் மூலம் வழங்கும், அறிவியல் உபகரணங்கள் தரமற்று விலை அதிகமாக உள்ளது. மேலும் பள்ளிகளின் தேவை அறிந்து, இவர்கள் வழங்குவதில்லை.
கடந்த ஆண்டு வாங்கிய உபகரணங்களையே மீண்டும் வழங்குகின்றனர். எனவே பழைய முறையிலேயே, அறிவியல் உபகரணங்களை வாங்க, வழிவகை செய்ய வேண்டும். அல்லது இதற்கு தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment