Sunday, March 23, 2014

பிளஸ் 2 உயிரியல் வினாத்தாளில் குளறுபடி: "சென்டம்" வாய்ப்பு குறைவு

பிளஸ் 2 பொதுத்தேர்வருக்கான உயிரியல் வினாத்தாளில், நான்கு ஒரு மதிப்பெண் வினாவும் ஒரு மூன்று மதிப்பெண் வினாவிலும் பிழை இருப்பதால், தேர்வர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர். அதனால், உயிரியல் பாடத்தில் சென்டம் மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

நேற்று முன்தினம் உயிரியல், வணிக கணிதம், வரலாறு, தாவரவியல் பாடங்களுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. அதில் உயிரியல் பாடத்திற்கான வினாத் தாளில், தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி வினாக்களில், அச்சுப் பிழைகளும், அர்த்தம் மாறிய வார்த்தைகளும் அதிகமாக இருந்தது. அதனால் உயிரியல் பாடத்தில் சென்டம் எடுக்கும் மாணவரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பகுதி-2, விலங்கியல் பாடத்தின், பிரிவு &'அ&' பகுதியில், ஒரு மதிப்பெண் வினா எண்: 4ல், தமிழில், "இன்ஹிபிடின்" என்பதற்கு "இன்ஹிபிசன்" என்றும், என அச்சாகி உள்ளது. வினா எண்: 9ல், தமிழில் &'நொதி&' என்பதற்கு &'அமிலம்&' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
வினா எண்: 12ல், தமிழில் &'தினமும்&' என்ற வார்த்தை சரியாகவும், ஆங்கிலத்தில், &'தினமும்&' என்ற வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை கொடுக்கப்படவில்லை. வினா எண்: 14ல், தமிழில், &'எஸ்செரீச்சியா கோலை&' என்பதற்கு பதிலாக, &'எஸ்செரீச்சியா கோவை&' என்றும், ஆங்கிலத்தில் சரியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மதிப்பெண் வினாவில், வினா எண்: 25ல், தமிழில், &'சுற்றுசூழல் தாக்கம்&' என சரியாக கொடுக்கப்பட்டு, ஆங்கிலத்தில், &'environment impact&' என்பதற்கு பதிலாக, வெறும் &'impact&'&' என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், சுற்றுசூழல் தாக்கம் குறித்து, நன்மையை எழுதுவதா அல்லது தீமையை எழுதுவதா என தேர்வர்கள் குழம்பினர். மொத்தமாக, நான்கு ஒரு மதிப்பெண் வினா மற்றும் ஒரு மூன்று மதிப்பெண் வினாவில், பிழை இருப்பதால், தேர்வர்கள் குளறுபடிக்கு ஆளாகினர்.
தமிழ்வழி கற்ற தேர்வர், தமிழில் உள்ள வினாக்களை மட்டுமே அர்த்தம் கண்டறிந்து எழுதுவர். அதேபோல், ஆங்கிலவழி கற்ற தேர்வர், ஆங்கிலவழி உள்ள வினாக்களை புரிந்து கொண்டு எழுதுவர். இரண்டிலும் மாற்றி மாற்றி வெவ்வேறு அர்த்தத்திலும், சிலது சரியாகவும், எழுத்துப் பிழையுடனும், சில வினாக்கள் கேட்கப்பட்டதால், &'சென்டம்&' மதிப்பெண் எடுக்கும் தேர்வரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
"மருத்துவ படிப்புக்குச் செல்லும் மாணவருக்கு, உயிரியல் பாடம் முக்கியமானது என்பதால், அதில், சென்டம் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதில் பல வினாக்கள் குளறுபடியாக உள்ளதால், சென்டம் எடுப்பது குறைந்துவிடும். பிழையான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment