Wednesday, March 12, 2014

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு: மதுரையில் துவக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரையில் இன்று துவங்குகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட ஏழு மாவட்டத்தினர் இதில் பங்கேற்கின்றனர்.

இத்தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டதன் அடிப்படையில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 3,580 பேர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில், எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சனி மற்றும் ஞாயிறு தவிர மார்ச் கடைசி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடக்கிறது.
ஒவ்வொரு நாளும், 240 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம் 10 &'போர்டுகள்&' அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பி., இணை இயக்குனர் உமா முன்னிலையில் இப்பணிகள் நடக்கின்றன. உரிய சான்றிதழ்களுடன், தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment