Monday, March 3, 2014

100 சதவீத இ-கல்வியறிவு: கேரள கிராமம் தேர்வு

கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள பள்ளிச்சால் பஞ்சாயத்து, அந்த மாநிலத்தின் முதல் 100 சதவீத, "இ-கல்வியறிவு" கிராமமாக தேர்வாகியுள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள அனைவரும், இணையதளத்தை பயன்படுத்துவது, இணையதளம் மூலம், புதிய தகவல்களை பெற்றுக் கொள்வது போன்ற கல்வியறிவை பெற்றுள்ளனர். இதன் மூலம், இந்த கிராமம் தான், நம் நாட்டிலேயே, முதல் 100 சதவீத, இ-கல்வியறிவு கிராமமாக தேர்வாகியுள்ளதாக, மாநில, காங்கிரஸ் முதல்வர், உம்மன் சாண்ட, நேற்று அறிவித்தார்.
பிற கிராமங்களுக்கும் இந்த கல்விமுறையை பரவலாக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment