Thursday, March 27, 2014

கணினி அறிவியலில் தேர்வு எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக அமைந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர். இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியரின் கருத்து......

பெனாசீர், மாணவி, ஜோதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை: அனைத்து வினாக்களும் புளு பிரின்ட் அடிப்படையில் தான் கேட்கப்பட்டன. தொகுதி 1 மற்றும் தொகுதி 2ல் இருந்து சம அளவில் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, &'சி++&', &'ஸ்டார் ஆபீஸ் ரைட்டர் ஓர் அறிமுகம்&', ஆகிய பாடங்களில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் வந்திருந்தன. அதேபோல், 35 மதிப்பெண்களுக்கான ஐந்து மார்க் வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக தான் இருந்தன. 150க்கு 140க்கும் மேல் எளிதாக எடுக்க முடியும்.
அஜ்மீர், மாணவர், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மதுரை: தொகுதி 1ல் உரை வடிவூட்டல், அட்டவணையில் வேலை செய்தல், பல்லூடகம் அறிமுகம் ஆகிய பாடங்களிலும் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்பட்டன. 76, 77, 79 மற்றும் 86 ஆகிய கட்டாய வினாக்கள் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாக அமைந்திருக்கும்.
கார்த்திக், ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தா.வாடிப்பட்டி: சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட, எளிதாக 70 மதிப்பெண் எடுக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. ஒரு மதிப்பெண் வினாவில், 5 வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் அமைந்திருந்தன. 2 மதிப்பெண் வினாவில் 25 கொடுத்து, 20 வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும். இதில், 21 வினாக்கள் எளிமையாக அமைந்திருந்தன. 5 மதிப்பெண் பகுதியில், 10க்கு 7 வினாக்கள் எழுத வேண்டும். இதில், 7 வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக இருந்தன. இத்தேர்வில், 190 மதிப்பெண் வரை மாணவர்கள் எளிதாக பெறலாம், என்றார்.

No comments:

Post a Comment