Friday, January 17, 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம் ரூ.44.57 கோடி ஒதுக்கீடு

முழுமை பெறாத கட்டிட பணியை விரைந்து முடிக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 44.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கட்டிடம், கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக ஆண்டு தோறும் மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து வருகிறது. அதன்படி 2012-13ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமை பெறாத பணிகளை முடிப்பதற்காக 2013-14ம் ஆண்டு வரை திட்ட நிதி ஒதுக்கீடு பொதுக்கழிப்பறைகள், மாணவியருக்கு தனிக்கழிப்பறைகள் மற்றும் பள்ளிகளுக்கு குடிநீர் வசதி மேற்கொள்ள 44.57 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2012-13ம் ஆண்டிற்கான நிதியானது 1,677 பொதுக்கழிப்பறைகள் 2,310 மாணவிகளுக்கான தனிக்கழிப்பறைகள் மற்றும் 1,637 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி மேற்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து பணிகளும் 2012-13ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிதியில் பொது கழிப்பறை மற்றும் மாணவிகளுக்கான தனிக்கழிப்பறைகள் தலா ஒரு லட்சம் குடிநீர் வசதி மேற்கொள்ள 28 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசால் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களை பின்பற்றி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் பொதுக்கழிப்பறை 28க்கு தலா ஒரு லட்சம் வீதம் 28 லட்சம், மாணவியருக்கான தனிக்கழிப்பறை 28க்கு தலா ஒரு லட்சம் வீதம் 28 லட்சம், குடிநீர் வசதி மேற்கொள்ள 24க்கு தலா 28 ஆயிரம் வீதம் 6.72 லட்சம் என, மொத்தம் 62.72 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment